தமிழ், இந்தி என பல மொழிகளில் கலக்கி வரும் பிரபல மூத்த பாடகி உஷா உதுப்பின் கணவர் ஜானி சாக்கோ உதுப் மாரடைப்பால் உயிரிழந்தார். 78 வயதான அவரின் இறுதிச்சடங்கு இன்று கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
இந்தி சினிமாவில் பின்னணிப் பாடகியாக தன் பயணத்தைத் தொடங்கிய உஷா உதுப் தமிழ், மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் பாடியுள்ளார்.
கொல்கத்தாவில் தன் கணவர், மகன், மகளுடன் உஷா உதுப் வசித்து வந்த நிலையில் உஷா உதுப்பின் கணவர் ஜானி சாக்கோ உதுப் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு திரைத்துறையினரும் சினிமா ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.