அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் சப்ரினா. இவரது சகோதரரான ஷான் பெட்ரி ஓரின சேர்க்கையாளர் என்பதால் பால் என்ற ஆண் நண்பரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சரோகேசி முறை மூலம் ஷான் பெட்ரியின் குழந்தையை சகோதரி சப்ரினா பெற்றெடுத்துள்ளார்.
தற்போது குழந்தையுடன் கூடிய தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு தாயாக மட்டுமல்லாமல் அத்தையாகவும் தனது சகோதரரின் குழந்தையை மிகவும் நேசிப்பதாக சப்ரினா கூறியுள்ளார். வரும் காலங்களிலும் இதே போன்று, தனது சகோதரனின் குழந்தைகளை பெற்றெடுக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.