விபச்சார விடுதியில் தங்கி டார்ச்சர் அனுபவித்த சீதா!

அனு ராகவபுடி இயக்கத்தில், துல்கர் சல்மான் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் சீதாராமம். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்த திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக, இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த மிருணாள் தாகூரின் நடிப்பு பலராலும் புகழப்பட்டது. பல இளைஞர்களின் கனவுக் கண்ணியாகவும் மாறிய இவரது வீடியோக்கள் தான், பல வாட்ஸ்அப் ஸ்டேடஸ்களில் நிறைந்திருந்தது. இந்நிலையில், மிருணாள் தாகூர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தான் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படத்திற்காக, கொல்கத்தாவில் உள்ள விபச்சார விடுதியில், 2 வாரங்கள் தங்கியிருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அங்கிருந்த பெண்களின் அனுபவங்களை விசாரித்தபோது, மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன் என்றும் தெரிவித்துள்ளார். இதன்பின் உளவியல் ஆலோசனையின் உதவியுடன் பழைய நிலைக்கு மீண்டும் திரும்பியதாக தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.