சுதா கொங்காரா – சூர்யா கூட்டணியில், புறநானூறு என்ற திரைப்படம் உருவாக இருந்தது. ஆனால், அப்படம் கைவிடப்பட்டதையடுத்து, சிவகார்த்திகேயன் அந்த கதையில் நடிப்பதற்கு கமிட் ஆனார். இந்த திரைப்படத்தின் பணிகள், தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டு முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது, வரும் 20-ஆம் தேதி முதல், இப்படத்தின் படப்பிடிப்பை, படக்குழுவினர் தொடங்க உள்ளார்களாம். இரண்டாவது அப்டேட் என்னவென்றால், இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோவை எடுப்பதற்கு முன்பு படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர்.
ஆனால், தற்போது அந்த முடிவை அவர்கள் கைவிட்டுள்ளார்களாம். அந்த டீசருக்கான படப்பிடிப்பை நடத்துவதற்கான பேச்சுவார்த்தையின்போது தான், எஸ்கேவுக்கும், சுதாவுக்கும் இடைய மனக்கசப்பு ஏற்பட்டது. ஆரம்பமே அபசகுணமாக நடந்ததால், அந்த டைட்டில் டீசரை எடுப்பதற்கான முடிவை அவர்கள் கைவிட்டுள்ளார்களாம்.