மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து அமரன் திரைப்படம் உருவாகியிருந்தது. இந்த திரைப்படத்தில், ராணுவ உடை அணிந்துக் கொண்டு, நாயகியை பார்க்கும் வகையில், காட்சி ஒன்று அமைக்கப்பட்டிருக்கும்.
சினிமாவில் நடந்த இந்த காட்சியை, தனது நிஜ வாழ்க்கையில், சிவகார்த்திகேயன் நடத்தி காட்டியுள்ளார். அதாவது, ராணுவ அதிகாரி போன்ற உடையை அணிந்துக் கொண்டு, தனது வீட்டிற்கு சிவகார்த்திகேயன் சென்றுள்ளார்.
பின்னர், சமையல் அறையில் இருந்த தனது மனைவி ஆர்த்திக்கு, பிறந்த நாள் வாழ்த்து கூறி, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை எஸ்.கே பதிவிட்டிருந்த நிலையில், அதற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.