தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர், அடுத்த விஜய் என்று கூறும் அளவுக்கு, சினிமாவில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு இருக்கிறார்.
இவ்வாறு இருக்க, நிகழ்ச்சி ஒன்றில், சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டுள்ளார். அப்போது, சமூக வலைதள பயன்பாடு குறித்து, அவரிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்த அவர், சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதை நிறுத்தி 2 வருடங்கள் ஆகிவிட்டது என்றும், அவ்வாறு நிறுத்தவிட்டதால், நான் தெளிவான முடிவுகளை எடுக்கிறேன் என்றும், தெரிவித்துள்ளார்.