Connect with us

Raj News Tamil

ராணுவ வீரராக மாறும் சிவகார்த்திகேயன்!

சினிமா

ராணுவ வீரராக மாறும் சிவகார்த்திகேயன்!

ரங்கூன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவர், அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து, புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

கமல் ஹாசன் தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் கதைக்களம் தொடர்பான தகவல் கசிந்துள்ளது.

அதாவது, அசோக் சக்ரா விருது வாங்கிய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி, இந்த படம் உருவாக உள்ளது. இந்த தகவல், சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு, பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

More in சினிமா

To Top