அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் தான் கலந்துக் கொண்ட நிகழ்வில், சிறப்புரையாற்றியிருந்தார். அப்போது, திமுகவின் மூத்த அமைச்சராக இருக்கும் துரைமுருகனுக்கு, துணை முதல்வர் பதவி வழங்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இது திமுக வட்டாரத்தில், சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், அன்புமணி ராமதாஸின் இந்த பேச்சுக்கு, அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், பல மூத்த தலைவர்கள் பா.ம.க-வில் இருந்தபோதிலும், அன்புமணி தலைவர் ஆனது எப்படி என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், இடஒதுக்கீட்டிற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பாஜகவின் கூட்டணியில் இருந்து, பாமக வெளியேறுமா? என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்துவதற்கு, குரல் கொடுப்பீர்களா? என்றும், அவர் கேள்வி எழுப்பினார். இவரது இந்த பேச்சுக்கு, பாமகவின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது, “நாளையே பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற தயார். மற்றும் திமுகவிற்கு நிபந்தனையின்றி ஆதரவு அளிக்கவும் தயார். அவ்வாறு செய்தால், வருகின்ற பேரவை கூட்டத்திலேயே 15 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை திமுக நிறைவேற்றுமா” என்று கேள்வி எழுப்பினார்.