அமரன் படத்திற்கு பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில், சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ரிலீஸ்-க்கு முன்னரே, இப்படத்தின் வெளிநாட்டு உரிமை, 12 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டதாம்.
ஆனால், குறைவான தொகைக்கு விற்பனை செய்துவிட்டதாக நினைத்து, தயாரிப்பாளர்கள் தற்போது புலம்பி வருகிறார்களாம். அதாவது, அமரன் திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் 105 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம்.
இந்த திரைப்படம் வசூலில் சாதனை படைத்திருப்பதால், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு, வெளிநாடுகளில் நல்ல தொகை கிடைத்திருக்கும். ஆனால், அமரன் வெற்றியை கணிக்க முடியாமல், சிறிய தொகைக்கு இந்த படத்தை விற்பனை செய்துவிட்டார்களாம்.