சினிமா
மீண்டும் கார்த்தியுடன் மோதும் சிவகார்த்திகேயன்..!
கோலிவுட்டின் முன்னணி திரை நட்சத்திரமாக வலம் வருபவர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி. தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில், மாவீரன் என்ற படத்தில் எஸ்கே பிசியாக நடித்து வருகிறார்.
இதே போன்று நடிகர் கார்த்தியும், இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகும் ஜப்பான் என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மாவீரன் படமும், ஜப்பான் படமும் வரும் ஜூன் 29-ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக கடந்த தீபாவளி அன்று இவர்களது படமான சர்சார் மற்றும் பிரின்ஸ் மோதியது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் கார்த்தி, சிவகார்த்திகேயன் படங்கள் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
You must be logged in to post a comment Login