நம்பவே முடியல.. பிரபல நடிகரின் நிகழ்ச்சியில் SK பங்கேற்பு!

தமிழ் சினிமாவில், இயக்குநர் பாலா நுழைந்து, 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதனை கொண்டாடும் வகையிலும், வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவும், ஒரே மேடையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், வணங்கான் படத்தின் ஹீரோ அருண் விஜய் உட்பட, படக்குழுவினர் பலர் கலந்துக் கொண்டனர். அதே சமயம், பலரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, நடிகர் சிவகார்த்திகேயனும், அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார்.

அதாவது, நடிகர் சிவகார்த்திகேயனை மறைமுகமாக விமர்சித்து அருண் விஜய் பதிவு போட்டதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன் வசனம் ஒன்றை பேசியதாகவும், சர்ச்சை ஒன்று சில வருடங்களுக்கு முன்பு பரவியது.

இதனால், இவர்கள் இருவருக்கும், பிரச்சனை என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இவ்வாறு இருக்க, இருவரும் ஒரே நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளது, பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News