நடராஜனின் வாழ்க்கை வரலாற்றில் சிவகார்த்திகேயன்!

டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு, பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு பிறகு, மாவீரன் என்ற திரைப்படத்திலும், ரங்கூன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு, மிகப்பெரிய ப்ராஜெக்டில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

அதாவது, தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் நட்ராஜனின் வாழ்க்கை வரலாற்றில், சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த தகவல், அவரது ரசிகர்களுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறிய கிராமத்தில் பிறந்து, ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்தவர் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.