மாவீரன் திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த டிரெய்லரில் ஐஜேகே கட்சியின் கொடியை தவறான வகையில் காட்சிப்படுத்தியிருப்பதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சில நிபந்தனைகளுடன் படம் வெளியிடலாம் என்று உத்தரவிட்டார்.
அதாவது, இந்த படத்தில் எந்த கட்சியையும் குறிப்பிடவில்லை என்ற பொறுப்பு துறப்புடன் படத்தை வெளியிட வேண்டும். மேலும் கட்சி கொடியின் நிறத்தை மாற்றிய பின்னரே ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
எனவே, திட்டமிட்டபடி மாவீரன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்.