கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படம் மூலம் பட்டித் தொட்டியெல்லாம் அறிமுகமான இவர், குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.
இந்த நிலையில் இவரது நடிப்பில், கடந்த தீபாவளி அன்று வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் முதல் காட்சியிலேயே நெகடிவ் விமர்சனங்களை குவித்து, படுதோல்வி அடந்தது.

இதனால் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு, படத்தின் ஹீரோவான சிவகார்த்திகேயன், படத்தின் பாதி தொகையான 6 – கோடியை, இழப்பீடு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.