இயக்குநராக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர், நடிப்பு மட்டுமின்றி, பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்று பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் விரைவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, புதிய திரைப்படம் ஒன்றை சிவகார்த்திகேயன் இயக்கி, நடிக்க உள்ளாராம்.