சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக, சமீபத்தில் கூறப்பட்டது. இந்த திரைப்படம், துப்பாக்கி பட பாணியில் உருவாக உள்ளது என்றும் சொல்லப்பட்டது.
தற்போது இந்த திரைப்படத்தின் பட்ஜெட் தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.75 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாம். படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் ரூ.30 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ரூ.20 கோடி சம்பளமும், இசையமைப்பாளர் அனிருத்துக்கு ரூ.7 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். படத்தின் மொத்த பட்ஜெட்டான 75 கோடியில் ரூ.57 கோடி சம்பளத்தில் போய் விட மீதமுள்ள 18 கோடியில் தான் படம் உருவாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.