முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, அமரன் என்ற திரைப்படம் உருவாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் தான், சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்திருந்தார்.
இது மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருந்தது. தற்போது, தனது 25-வது படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை, சுதா கொங்காரா தான் இயக்கி வருகிறார். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக, சிவகார்த்திகேயன் வாங்கியுள்ள சம்பளம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 70 கோடி ரூபாயை, சிவகார்த்திகேயன் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.