தனுஷ்-க்கு அண்ணனாக நடிக்கும் சூப்பர் ஸ்டார்!

திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய இரண்டு வெற்றிப்படங்களை தற்போது தனுஷ் கொடுத்துள்ளார். இவரது வாத்தி திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.

இதற்கிடையே, அருண் மதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில், தனுஷ் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தில், தனுஷிற்கு அண்ணனாக, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

70-களில் இருந்த கேங்ஸ்டர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.