மிரட்டும் மாண்டஸ் புயல் : கடல் சீற்றத்தால் 6 வீடுகள் இடிந்து தரைமட்டம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தற்போது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதனை ஒட்டி உள்ள கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சுமார் 10 அடி உயரத்திற்கு கடல் அலைகள் கரைக்கு வந்து செல்கிறது.

latest tamil news

மரக்காணம் அருகே உள்ள பிள்ளைச்சாவடி கிராமத்தில் இருக்கும் ஆறு வீடுகள் முழுமையாக கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டது. மூன்றுக்கும் மேற்பட்ட படகுகளும் கடல் அலைகளில் இழுத்துச் செல்லப்பட்டது.

இதுவரை பிள்ளைச்சாவடி கிராமத்தில் மட்டுமே சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு புயலின் சமயத்திலும் வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்படுவதாக பிள்ளைச்சாவடி கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.