சென்னை பெருநகரில் கடந்த ஏழு நாட்களில் பதினாறு குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் 01.01.2024 முதல் 28.07.2024 வரை சென்னை பெருநகரில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 796 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் அவர்கள் உத்தரவின்பேரில் 22.07.2024 முதல் 28.07.2024 வரை ஏழு நாட்களில் 16 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் நபர்கள், கொலை, கொலை முயற்சி போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிக்கும் நபர்கள் மற்றும் போதைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் நபர்களை மற்றும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.