விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெணி. செவன் ஸ்கீரின் ஸ்டுடியோவும், ரௌடி பிக்சரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள எஸ்.ஜே.சூர்யாவின், கதாபாத்திர அறிமுக போஸ்டர், தற்போது வெளியாகியுள்ளது.
இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள், எஸ்.ஜே.சூர்யாவின் வித்தியாசமான லுக்கை, புகழ்ந்து வருகின்றனர். மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.