விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தின் வெற்றி விழா, நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சிறப்புரையாற்றினார். அப்போது, என்னுடைய New, அன்பே ஆருயிரே ஆகிய திரைப்படங்கள், மிகப்பெரிய வெற்றி பெற்றன.
இருப்பினும், அதன்பிறகு, இருந்த இடம் தெரியாமல் போய்விட்டேன். அதை நினைத்தால், இப்போதும் வருத்தமாக உள்ளது. இறைவி படத்திற்கு பிறகு தான், என் சினிமா வாழ்க்கை மீண்டும் ஆரம்பமானது.
பிறகு, பெரிய இயக்குநர்களுடன் பணிபுரிய தொடங்கினேன். மாநாடு ஒரு நல்ல இடத்தை கொடுத்தது.. மார்க் ஆண்டனி மூலம், நான் விட்ட இடத்தை மீண்டும் பிடித்துவிட்டேன் என்று தெரிவித்தார்.