நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த திரைப்படத்திற்கு, அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில், இதன் 2-ஆம் பாகம் தொடர்பான அறிவிப்பு, சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
அதன்படி, இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க உள்ளாராம். முதல் பாகத்தை போலவே, இந்த பாகத்திலும் வில்லன் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.