ராயன் படத்தில் நடித்ததற்கு எஸ்.ஜே.சூர்யாவுக்கு எவ்வளவு சம்பளம்?

வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. இந்த படத்திற்கு பிறகு, குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார்.

தற்போது முழு நேர நடிகராக மாறியுள்ள இவர், மார்க் ஆண்டனி, மாநாடு ஆகிய பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து, நடிப்பு துறையில் முத்திரை பதித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தற்போது தனுஷின் ராயன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தில் வில்லனாக நடித்ததற்கு அவருக்கு ரூபாய் 8 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம்.

RELATED ARTICLES

Recent News