ரங்கூன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் 21-வது திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம், உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதில், தனது உடலை செம ஃபிட்டாக சிவகார்த்திகேயன் மாற்றியுள்ளார். மேலும், இதுவரை இல்லாத வகையில், ராணுவ வீரர்களுக்கு சமமாக தனது உடலை அவர் மாற்றியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், எஸ்.கேவின் கடின உழைப்பை பாராட்டி வருகின்றனர்.