Connect with us

Raj News Tamil

வெளியான SK 21 திரைப்படத்தின் டைட்டில்..!

சினிமா

வெளியான SK 21 திரைப்படத்தின் டைட்டில்..!

ரங்கூன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராஜ்குமார் பெரியசாமி, தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில், முகுந்த் என்ற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சிவகார்த்திகேயனின் 21வது படத்திற்கு ‘அமரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

More in சினிமா

To Top