SK 25 படத்தின் டைட்டில் இதுதான்?

சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் தனது 25-வது படத்தில், சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். முதலில் சூர்யா நடிக்க இருந்த இப்படத்திற்கு, புறநானூறு என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.

தற்போது, அதே டைட்டில் வைக்கப்பட்டுள்ளதா? வேறு டைட்டில் மாற்றப்பட்டுள்ளதா? என்று, ரசிகர்கள் மத்தியில் கேள்வி ஒன்று இருந்தது. இந்நிலையில், இதற்கான பதில் கிடைத்துள்ளது. அதாவது, வேறு டைட்டிலை தான் படக்குழுவினர் தேர்வு செய்து வைத்துள்ளார்களாம்.

தற்போது வந்துள்ள தகவலின்படி, ‘1965’ என்று டைட்டில் வைத்துள்ளார்களாம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும், கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News