சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அமரன் என்ற திரைப்படம் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. இதனால், அவரது அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு என்பது, ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், எஸ்.கேவின் அடுத்த படம் தொடர்பான முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், எஸ்.கே தற்போது திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தான், அடுத்ததாக, ரிலீஸ் ஆக உள்ளது. இதன் 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் டீசர் ரிலீஸ் தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது.
அதன்படி, வரும் பொங்கல் பண்டிகை அன்று, இப்படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். ஏ.ஆர்.முருகதாஸ் நீண்ட வருடங்களுக்கு பிறகு படத்தை இயக்குவதாலும், எஸ்.கேவின் முந்தைய படமான அமரன் தந்த வெற்றியாலும், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.