தமிழகம்
“Next நான் தான்” – வரிசையாக பாலியல் வன்கொடுமை தந்த சித்தப்பா! சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, தனது தாத்தாவின் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் அன்று, சோளக்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியை, பெரியசாமி என்ற 60 வயது முதியவர், பாலியல் வன்கொடுமை செய்திருந்தார்.
இதனை கண்ட அந்த சிறுமியின் சித்தப்பா இடும்பன் என்பவர், முதியவரை அங்கிருந்து துரத்தி அனுப்பிவிட்டு, இவரும் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார். இதற்கிடையே, அந்த சிறுமியிடம் நெருங்கி பழகி வந்த சஞ்சீவ் என்பவரும், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு இந்த 3 பேரும், தொடர்ந்து 6 மாதங்களாக, பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த சிலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில், அவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
