சின்னவெங்காயம் விலை கடும் வீழ்ச்சி : விவசாயிகள் வேதனை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சின்னவெங்காயம் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வெண்ணந்தூர் பகுதிகளில் சில மாதங்களுக்கு முன் சுமார் 1,000 ஏக்கரில் சின்னவெங்காயம் பயிரிடப்பட்டது. சாகுபடி செய்த சமயத்தில் சின்னவெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.30 வரை விற்கப்பட்டது.

ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.10க்கு மட்டுமே விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. உரிய விலை கிடைக்காததால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தற்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News