திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற வட்டாரங்களில் வெங்காயம் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதனால் வெங்காயத்துக்கு தனியாக திண்டுக்கல் நகரில் சந்தை உள்ளது. இந்த சந்தையில் தென்மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர்.
ஜூன் மாத தொடக்கத்தில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.50- ஐ கடந்து விற்பனையானது. அதன்பிறகு, படிப்படியாக விலை உயர்ந்து நேற்று ஒரு கிலோ வெங்காயம் மொத்த மார்க்கெட்டில் ரூ.80-க்கு விற்றது.
வெங்காயத்தின் வரத்து குறைந்து வருவதால் அதன் விலை 100 ரூபாயை தொடும் என வியாபாரிகள் தெவித்துள்ளனர். அதே நேரத்தில் பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விலை குறைந்து விற்பனையாவது குறிப் பிடத்தக்கது.