கடலூர் மாவட்டம் வண்டி பாளையம் பகுதியில் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் அசோகன். இவருடைய வீட்டில் சிறுவர்கள் அணியும் ஹூவில் குட்டி நல்ல பாம்பு ஒன்று பதுங்கி உள்ளது.
அப்போது, பள்ளிக்கூடம் செல்வதற்கு முன்பு ஹூவை தட்டும் பொழுது அதற்குள் பதுங்கியிருந்த பாம்பைக் கண்டு அசோகன் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து பாம்பு பிடி வீரருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர் செல்வா ஷூவில் இருந்த சிறிய நல்ல பாம்பை பிடித்தார்.
நல்லப்பாம்பு ஷூவில் பதுங்கியிருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெளியே செல்லும் போது காலனியை கட்டாயம் ஆராய்ந்த பிறகே அணிய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.