ஸ்மார்ட் சிட்டி பணிகள்

திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஒப்பந்ததாரர்கள் காலதாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும் என்று, அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று, அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.