ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நடந்த பயங்கர ரயில் விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். 900 பேர் காயமடைந்துள்ளனர். தவறான சிக்னல் கொடுத்ததே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் ஒடிசாவில் செகந்திராபாத் – அகர்தலா எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.