ஸ்மிருதி இரானிக்கு இம்முறை அமைச்சரவையில் இடமில்லை.!!

கடந்த 2014ஆம் ஆண்டு உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி ராகுல் காந்தியிடம் தோல்வி அடைந்தார். இருப்பினும், அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இதையடுத்து 2019 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியை 55,120 வாக்குகள் வித்தியாத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். பாஜகவின் நட்சத்திர வேட்பாளரான ஸ்மிருதி இரானி இந்த முறை மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்தார். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி 3வது முறையாக இன்று இரவு பதவியேற்கவுள்ள நிலையில் ஸ்மிருதி இரானிக்கு மத்திய அமைச்சரவையில் இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

RELATED ARTICLES

Recent News