தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல்வேறு மொழிகளில், முன்னணி நடிகையாக இருந்தவர் சினேகா. இவர், நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு, சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.
சில சமயங்களில், ஏதாவது நல்ல கதாபாத்திரங்களில் மட்டும், அவ்வப்போது நடித்து வருகிறார். இவ்வாறு இருக்க, நடிகை சினேகா பேட்டி ஒன்றில் கூறிய வித்தியாசமான தகவல், ரசிகர்களை ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.
அதாவது, “ஒரு முறை பயன்படுத்திய ஆடையை, மீண்டும் அணிந்துக் கொண்டு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றேன். அப்போது, எனக்கு வேறு ஆடைகள் எதுவும் இல்லை என்று கிண்டலாக, மீடியோ ஒன்றில் செய்தி வெளியானது.
அந்த நாளில் இருந்து, ஒருமுறை பயன்படுத்திய ஆடையை, இன்னொரு முறை பயன்படுத்தக் கூடாது என்ற முடிவை எடுத்தேன். நான் விலை உயர்ந்த உடைகளை தான் வாங்குவேன்.
இருந்தாலும், ஒரு முறை பயன்படுத்திய பிறகு, என்னுடைய நண்பர்களுக்கும், தேவை உள்ளோருக்கும், அந்த ஆடையை கொடுத்துவிடுவேன்” என்று, நடிகை சினேகா பேசியுள்ளார். இவரது இந்த பழக்கம், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.