பிரசன்னாவுக்கும்-சினேகாவிற்கும் விவாகரத்தா?

நடிகை சினோவிற்கும், பிரசன்னாவிற்கும் கடந்த 2012-ஆம் ஆண்டு அன்று திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

ஆனால், சமீபகாலமாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும், தகவல் பரவி வந்தது.

இந்நிலையில், பிரசன்னாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள சினேகா, Happy Week End என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம், இருவரும் விவாகரத்து செய்வதாக வெளியான செய்தி, வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.