இந்தியாவில் பிரபலமான சமுக வலைதளமாக வலம் வந்த Koo, அதன் ஆரம்பக்கட்டத்தில் டிவிட்டருக்கு (X) போட்டியாக கருதப்பட்டது. இந்நிலையில் பல முக்கிய காரணத்தால் இந்நிறுவனத்தின் ஆப்ரேஷன்ஸ் மூடப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சமீப காலமாக Koo ஆப் கடும் நிதிநெருக்கடியில் மாட்டிக்கொண்டு தவித்து வந்த நிலையில், பல முதலீட்டு திரட்டும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து தோல்வி அடைந்தது.
இதன் காரணமாக தற்போது KOO தளத்தின் ஆப்ரேஷன்ஸ் மொத்தமாக மூடப்பட்டு உள்ளதாக நிறுவனர் அபிரமேய ராமகிருஷ்ணன் லின்ங்டுஇன் தளத்தில் அறிவித்துள்ளார்.