சில நேரங்களில் தோல்வியடைவது அவசியம்; அது நிறைய கற்றுத்தரும்: ஹர்திக் பாண்டியா!

சில நேரங்களில் தோல்வியடைவது அவசியம், ஏனெனில் அது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும் என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

முன்னதாக விளையாடிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி இந்திய அணியே ஆதிக்கம் செலுத்திய நிலையில், டி20 தொடரை இழந்தது.

இந்நிலையில் தோல்வி குறித்து இந்திய டி20 அணியின் கேப்டன் ஹர்திக் ஹர்திக் பாண்டியா பேசுகையில், சில நேரங்களில் தோல்வியடைவது அவசியம், ஏனெனில் அது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும். கடினமான நிலையில் அணி போராடிய விதம் குறித்தும் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்காலத்தில் வீரர்கள் இந்த அனுபவத்தை தங்களை மேம்படுத்த பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

டி20 போட்டிகளில் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க எங்களுக்கு போதுமான நேரம் உள்ளது. சில சமயங்களில் தோல்வி மிகவும் நல்லது, ஏனென்றால் அது உங்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறது’ என கூறினார்.

மேலும் அவர், ‘அனைத்து இளம் வீரர்களுக்கும் சிறப்பான நன்றி. உண்மையைச் சொல்வதென்றால், அவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்கள் இந்த தொடரை சவாலாக ஏற்றுக்கொண்டனர் மற்றும் தொடர் முழுவதும் அதனை வெளிப்படுத்தினர். வெற்றி மற்றும் தோல்வி செயல்முறையின் ஒரு பகுதியாகும்” என்று மேலும் கூறினார்.

RELATED ARTICLES

Recent News