காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்தி டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லேசான காய்ச்சல் அறிகுறி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.