நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்த திரைப்படம் சூது கவ்வும். பல வருடங்களுக்கு பிறகு, இப்படத்தின் இரண்டாம் பாகம், தற்போது உருவாகியுள்ளது.
இதில், மிர்ச்சி சிவா, கருணாகரன் உள்ளிட்டோர், முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த 13-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், இதன் வசூல் நிலவரம் குறித்து, தகவல் கசிந்துள்ளது. அதன்படி, முதல் நாளில் மட்டும், 45 லட்சம் ரூபாயை இப்படம் வசூல் செய்துள்ளது.