விடுதலை படத்திற்கு பிறகு, பிசியான ஹீரோயாக மாறிய நடிகர் சூரி, தற்போது கொட்டுக்காளி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இந்த திரைப்படம், பெர்லின் திரைப்பட விழாவிலும், திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்திற்காக தான் மேற்கொண்டுள்ள புதிய முயற்சி குறித்து சூரி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், இப்படத்திற்காக தனது குரல் வளத்தை மாற்ற, சில நாட்டு மருந்துகளை சூரி எடுத்துக் கொண்டுள்ளாராம்.
அந்த மருந்துகளை எடுத்துக் கொண்ட பின், தொண்டைக் கட்டிக் கொண்டது போல் அவரது குரல் மாறிவிட்டதாம்.
அதன்பிறகு தான், அப்படத்திற்கு சூரி டப்பிங் பேசியுள்ளாராம். முன்னணி நடிகர்களே செய்யத் தயங்கும் விஷயத்தை, நடிகர் சூரி செய்திருப்பது, பலரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.