சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில், ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவான திரைப்படம் செர்க்கவாசல். சிறை வாழ்க்கையையும், அதன் உள்ளே நடந்த கலவரத்தையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம், நவம்பர் 29-ஆம் தேதி அன்று, ரிலீஸ் ஆனது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இப்படம் ரிலீஸ் ஆன நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இந்நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து தெரியவந்துள்ளது.
அதன்படி, உலகம் முழுவதும் 6.5 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளதாம். கிட்டதட்ட 20 கோடி பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், படத்தின் பாதி முதலீட்டை கூட, திரும்ப பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.