‘சூப்பர் 8’ இங்கிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா!

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றின் குரூப் – 2 போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின.

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச தேர்வு செய்த நிலையில், தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.

டிகாக் (65) மற்றும் டேவிட் மில்லர் (43) ஆகியோரின் அற்புதமான பேட்டிங் திறனால், தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

164 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, தொடக்கத்திலேயே சால்ட் (11 ரன்கள்) மற்றும் பேர்ஸ்டோ (16 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர், ஹாரி ப்ரூக் (53 ரன்கள்) மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் (33 ஓட்டங்கள்) குவித்து இங்கிலாந்து அணியை மீட்டெடுத்தனர்.

இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 6 ரன்கள் மட்டுமே எடுத்தது, இதன்மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

RELATED ARTICLES

Recent News