ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் தென்னாப்பிரிக்கா அணி நுழைந்தது.
டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே ஜென்சென் பந்துவீச்சில் குர்பாஸ் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து, குல்பதின் நைப் 9 ரன்களில் அவரது ஓவரிலேயே கிளீன் போல்டு ஆனார்.
இதையடுத்து, ரபாடாவின் மிரட்டல் பந்துவீச்சில் இப்ராஹிம் ஜட்ரான் போல்டு ஆகி வெளியேற, அதே ஓவரில் நபி டக்அவுட் ஆனார்.
அதன் பின்னர் ஷம்ஸியின் மாயாஜால சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ச்சி அடைய, ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவரில் 56 ரன்களுக்கு சுருண்டது.
அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 8.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் முதல் முறையாக டி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா முன்னேறியது.