Connect with us

Raj News Tamil

10 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு நுழைந்தது தென் ஆப்பிரிக்கா!

விளையாட்டு

10 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு நுழைந்தது தென் ஆப்பிரிக்கா!

டி20 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெற்று வரும் சூப்பர் 8 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் விளையாடின.

இந்தபோட்டி அரையிறுதிக்கு தகுதிப் பெறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் மேற்கிந்திய தீவுகள் பேட்டிங் செய்தது.

அதன்படி களமிறங்கிய ஜென்சென் வீசிய முதல் ஓவரிலேயே ஷாய் ஹோப் (0) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பூரன் 1 ரன்னில் மார்க்ரம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ரஸ்டன் சேஸ் தொடக்க வீரர் கைல் மேயர்ஸுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த கூட்டணி 81 ரன்கள் குவித்தது.

மேயர்ஸ் 34 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஷம்ஸி பந்துவீச்சில் அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து வந்த ரோவ்மன் பாவெல் (1), ரூதர்போர்டு (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க சேஸ் அரைசதம் விளாசினார். அதிரடி காட்டிய அவர் 42 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் விளாசி ஷம்ஸி ஓவரில் வெளியேறினார்.

ரஸல், அகேல் ஹொசைன் சொற்ப ரன்களில் வெளியேற, மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. ஷம்ஸி 3 விக்கெட்டுகளும், ஜென்சென், மார்க்ரம், மஹாராஜ் மற்றும் ரபாடா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அதன் பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்றிக்ஸ் (0), டி காக் (12) இருவரும் ரஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அப்போது மழை குறுக்கிட்டதால் 17 ஓவர்களில் 123 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என தென் ஆப்பிரிக்க அணிக்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

கேட்பன் மார்க்ரம் 18 ரன்களிலும், கிளாசென் 22 ரன்களிலும் அல்சரி ஜோசப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். எனினும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் மேற்கிந்திய தீவுகளுக்கு நெருக்கடி கொடுத்தார்.

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. டேவிட் மில்லர் 4 ரன்களிலும், ஸ்டப்ஸ் 29 (27) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மஹாராஜ் 2 ரன்களில் அவுட் ஆக, ஜென்சென் அதிரடியாக ஆடினார்.

கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்திலேயே ஜென்சென் சிக்ஸர் விளாசினார்.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. சேஸ் 3 விக்கெட்டுகளும், அல்சரி ஜோசப் மற்றும் ரஸல் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை விட்டு வெளியேறியது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top