Connect with us

Raj News Tamil

போராடி தோற்றத்தில் மகிழ்ச்சி! – தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா!

விளையாட்டு

போராடி தோற்றத்தில் மகிழ்ச்சி! – தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா!

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியது, ‘வார்த்தைகளால் இந்த தோல்வியை என்னால் விவரிக்க முடியவில்லை, முதலில் நான் ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சரியான துவக்கத்தை நாங்கள் எடுக்கவில்லை. ஆரம்பத்திலேயே 4 விக்கெட்டுகளை இழந்ததும் எங்கள் தோல்விக்கு முக்கியமான காரணம்.

இருப்பினும் பல வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதிவரை ஒரு போராட்டமான ஆட்டத்தை அளித்துள்ளோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Continue Reading

More in விளையாட்டு

To Top