பாஜகவை விரட்டியடித்த தென்னிந்தியா…சம்மட்டி அடி கொடுத்த கர்நாடகா தேர்தல்..!

கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கும் கடந்த 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் பாஜக படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ளது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் பாஜகவுக்கு இந்த தேர்தல் மிக முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

தென் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் மட்டுமே பாஜக ஆட்சியில் இருந்து வந்தது. எனவே இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரமாக களம் இறங்கியது. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

காங்கிரஸ் முக்த் பாரத்’ (காங்கிரஸ் இல்லாத இந்தியா) என்ற கோஷத்தோடு பாஜக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வந்தது. பாஜகவின் இந்த கோஷத்திற்கு விழுந்த பெரிய அடியாகவே கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி காட்டுகிறது.

தென்னிந்தியாவில் ஒரு மாநிலத்தில் கிடைத்த ஆதரவையும் பாஜக தற்போது இழந்துள்ளதால் பாஜக இல்லாத தென் இந்தியா என்ற நிலை மீண்டும் திரும்பியுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பாஜக இல்லாத மாநிலமாக உள்ளன.

இது தொடர்பாக #BJPMuktSouthIndia (பாஜக இல்லாத தென்னிந்தியா) என்ற ஹேஷ் டேக் மூலம் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News