சௌமியா அன்புமணி கைது!

அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், ஞானசேகரன் என்ற நபரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும, ஒருவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார் என்றும், அவரையும் கைது செய்ய வேண்டும் என்றும், எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, இந்த சம்பவத்தை கண்டித்து, அதிமுக, பாஜக, த.வெ.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பில், சௌமியா அன்புமணி தலைமையில், இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில், போராட்டம் நடத்தப்பட்டது.

அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தால், அங்கு வந்த காவல்துறையினர், சௌமியா அன்புமணி உள்ளிட்ட பாமகவினரை, கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

RELATED ARTICLES

Recent News