தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய கனமழை, புதன்கிழமை வரை தொடர்ந்து பெய்தது.
இதனால் வேலன்சியா பகுதி வெள்ளக்காடாக மாறியது. வெள்ளத்தில் வாகனங்களும், வீடுகளும் பலத்த சேதமடைந்தன.
வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 205-ஆக அதிகரித்துள்ளது. இதில், அதிகம் பாதிப்புக்குள்ளான வேலன்சியா பகுதியில் மட்டும் 202 பேர் உயிரிழந்தனர்.